தமிழ்நாடு

9,10,11ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறையா?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் 9,10,11ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்து வரும் நிலையில் இந்த தகவல் உண்மையில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து 9,10,11ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஏப்ரல் முதல் விடுமுறை என்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் இருக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்து வருகிறது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியபோது 9,10,11ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், இதுதொடர்பாக பரவி வரும் வதந்திகளை மாணவர்களும் பெற்றோர்களும் தயவு செய்து நம்ப வேண்டாம் என்றும், ஏப்ரல் மாதமும் தொடர்ந்து வகுப்புகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதால் வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் ஒருசில பள்ளிகளுக்கு தேவை ஏற்பட்டால் விடுமுறை அளிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

seithichurul

Trending

Exit mobile version