தமிழ்நாடு

இந்த வாரம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறையா?

Published

on

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே கனமழை காரணமாக ஒரு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது இன்றும் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கூடுதலாக 9 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை, கடலூர், நாகை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறாஇ அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதி மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

நவம்பர் 9ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த வாரம் முழுவதுமே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும்பாலான மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலவரத்தை பொறுத்து பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

 

seithichurul

Trending

Exit mobile version