தமிழ்நாடு

பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவேண்டுமா? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Published

on

பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவேண்டுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது.

அதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பள்ளிகளில் இருந்தே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருவதால் கொரொனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி மே மாதம் 1ஆம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் இருக்குமானால் அவை வீட்டிலிருந்து நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய கூடாது என கல்வித்துறை இணை இயக்ககம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version