தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பா? இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு!

Published

on

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதே தினத்தில் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இதுகுறித்து இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனையின் போது பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது என்பதும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும், கல்லூரி மாணவர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இதில் அண்டை மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்கலாமா? என்று ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்தது குறித்தும் இந்த ஆலோசனையில் பேசப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து இன்று மாலை அல்லது நாளை இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version