தமிழ்நாடு

பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம்: யார் யாருக்கு கிடைக்கும்?

Published

on

பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது குறித்த அரசாணை ஒன்றை சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது என்பது தெரிந்ததே.

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை அளிக்கும் அரசாணை சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு தொடங்க ஏதுவாக ரூபாய் 16.75 கோடி நிதி விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஊக்கத்தொகை வழங்க அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் வங்கிகளில் தனிநபர் வைப்பு நிதி கணக்கு தொடங்க எடுத்திருக்கும் முடிவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரம் என்ற அளவில் உள்ள மாணவியருக்கு மட்டுமே ஊக்கத் தொகை நேரடியாக வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version