வணிகம்

எஸ்பிஐ வங்கியில் இனி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, 2019 ஆகஸ்ட் 1 முதல் IMPS, NEFT மற்றும் RTGS பரிவர்த்தனைகள் கட்டணத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு முழு விலக்கு அளித்துள்ளது.

சென்ற மாதம் நடைபெற்ற ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பின் போது, வங்கிகளிடம் IMPS, NEFT மற்றும் RTGS கட்டணத்தை 2019 ஜூலை 1 குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

அதனால் ஜூலை மாதம் முதல் IMPS, NEFT மற்றும் RTGS கட்டணங்களைக் குறைப்பதாக எஸ்பிஐ அறிவித்திருந்து.

தற்போது மேலும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் IMPS, NEFT மற்றும் RTGS கட்டணங்களிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ யோனோ செயலி மூலமாகப் பணம் பரிவர்த்தனை செய்யும் போதும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

1) ரூ.0 முதல் 1,000 வரை – கட்டணம் கிடையாது.
2) ரூ.1,001 முதல் 10,000 வரை அனுப்பும் போது ஐஎம்பிஎஸ் கட்டணம் 1 ரூபாயும், கமிஷன் + ஜிஎஸ்டி: 2.36 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
3) ரூ.10,001 முதல் 25,000 ரூபாய் வரை பணம் அனுப்பும் போது 2 ரூபாயும், கமிஷன் + ஜிஎஸ்டி: 2.36 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
4)ரூ.25,001 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பும் போது 2 ரூபாயும், கமிஷன் + ஜிஎஸ்டி: 5.90 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
5)ரூ.1,00,001 முதல் 2 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பும் போது 3 ரூபாயும், கமிஷன் + ஜிஎஸ்டி: 11.80 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version