பர்சனல் ஃபினான்ஸ்

எஸ்பிஐ வங்கியில் கணக்கு இருக்கா? விதிகளில் புதிய மாற்றம்.. உடனே படிங்க!

Published

on

எஸ்பிஐ வங்கி என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஐஎம்பிஎஸ் பணம் பரிமாற்ற விதிகளில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது.

ஐஎம்பிஎஸ் என்றால் என்ன?

ஒரு வங்கிக் கணக்கிலிருந்து வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தைப் பரிமாற்றம் செய்ய உதவும் சேவையே ஐஎம்பிஎஸ். இணையதள வங்கி சேவை, ஏடிஎம் அல்லது பிற டிஜிட்டல் பரிமாற்ற சேவைகளில் இந்த ஐஎம்பிஎஸ் சேவையும் வழங்கப்படுகிறது. தற்போது ஐஎம்பிஎஸ் பணம் பரி மாற்றம் சேவையை 24 மணி நேரமும் செய்ய முடியும்.

எஸ்பிஐ வங்கி விதிகளில் புதிய மாற்றம்

ஐஎம்பிஎஸ் சேவை கீழ் ஒரு நாளில் 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய முடியும். பிப்ரவரி மாதம் முதல் இந்த வரம்பை 5 லட்சம் ரூபாயாக எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது.

இந்த சேவையைப் பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்யும் போது 5 லட்சம் ரூபாய்க்கு 20 ரூபாய் + ஜிஎஸ்டி சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதே நேரம் டிஜிட்டல் பணம் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக, இந்த ஐஎம்பிஎஸ் சேவையை இணையதள வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, யோனோ செயலி பயன்படுத்திச் செய்யும் போது கட்டணம் ஏதுமில்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version