இந்தியா

இந்த நம்பர்களில் இருந்து கால் வந்தால் ஆபத்து, எடுக்க வேண்டாம்: எச்சரிக்கை அறிவிப்பு

Published

on

இரண்டு நண்பர்கள் இருந்து கால் வந்தால் எடுக்க வேண்டாம் என்றும் அந்த காலை எடுத்தால் ஆபத்து என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து மோசடி செய்யப்படும் வகையில் இரண்டு நம்பரில் இருந்து கால் வந்துகொண்டிருப்பதாகவும், அந்த நம்பரில் இருந்து கால் வந்தால் கண்டிப்பாக எடுக்க வேண்டாம் என்றும் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நண்பர்கள் இதோ: +91 -8294710946 மற்றும் +91 -7362951973.

மேற்கண்ட இரண்டு நபர்களிடம் இருந்து பலருக்கு அழைப்பு வருகிறது என்றும் அந்த அழைப்பில் ஒரு மோசடியான லிங்க் அனுப்பி அதில் கே.ஒய்.சி பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தப்படுவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை இழக்க வேண்டி வரும் என்றும் எஸ்பிஐ வங்கி தனது டுவிட்டரில் தெரிவித்து .

மேலும் வாடிக்கையாளர்களிடம் வங்கி விவரங்களை கேட்போர் அல்லது மோசடியான லிங்க் ஆகியவை குறித்து தெரிய வந்தால், உடனடியாக report.phishing@sbi.co.in என்ற இ-மெயில் முகவரிக்கு அல்லது 1930 என்ற தொடர்பு எண்ணில் புகார் கூறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version