பர்சனல் ஃபினான்ஸ்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. செப்டம்பர் 14-ம் தேதியுடன் முடிகிறது எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட் திட்டம்!

Published

on

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பிளாட்டினம் டெபாசிட் திட்டம் என்ற சிறப்பு டிபாசிட் திட்டத்தை எஸ்பிஐ வங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு வழக்கமான பிக்சட் டெபாசிட் திட்டங்களை வீட கூடுதலாக 0.15 சதவீதம் வரை வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படும். ஆனால் இந்த சலுகை 2021, செப்டம்பர் 14-ம் தேதி மட்டுமே.

பிளாட்டினம் 75 டேஸ்: எஸ்பிஐ பிளாட்டினம் 75 ட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்பட்ட 3.90 சதவீத வட்டி விகிதத்தை விட கூடுதலாக 0.05 சதவீதம் என 3.95 சதவீத லாபம் கிடைக்கும்.

எஸ்பிஐ பிளாட்டினம் 525 டேஸ் திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் 5 சதவீதம் வட்டி விகிதம் என்பது 5.10 சதவீதமாக லாபம் கிடைக்கும்.

பிளாட்டினம் 2,250 டேஸ் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5.40 சதவீதத்திற்குப் பதிலாக 5.55 சதவீத லாபம் கிடைக்கும்.

மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட் திட்டங்கள்

மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு 4.45 சதவீதம், 5.60 சதவீதம், 6.20 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள இந்த எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தால் முதிர்வு காலம் வரை டெபாசிட்டை தொடர்ந்தால் தான் இந்த வட்டி விகித லாபம் கிடைக்கும். இடையில் வெளியேறினால் பழைய பிக்சட் டெபாசிட் வட்டி விகித லாபம் மட்டுமே கிடைக்கும். முழு விவரம்…

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/SBI-Platinum-Deposits.pdf” title=”SBI-Platinum Deposits”]

Trending

Exit mobile version