பர்சனல் ஃபினான்ஸ்

எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும் விடுமுறை நாட்களிலும் கிடைக்கும்.. வங்கி கிளைக்கும் செல்லவும் தேவையில்லை எப்படி?

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, புதிதாக இரண்டு இலவச எண்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு எண்களும் உங்களிடம் இருந்தால் எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும்,, விடுமுறை நாட்களிலும் உங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்பிஐ வங்கி சேவையை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பெற வங்கி கிளைக்கும் செல்ல தேவையில்லை.

அது குறித்து டிவிட்டர் பதிவும் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ள எஸ்பிஐ, “உங்கள் வங்கிக் கணக்கு பிரச்சினைகளுக்கு குட் பை செல்லுங்கள். 1800 1234 அல்லது 1800 2100 இலவச எண்ணை அழையுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் 24*7 சேவை இலவச எண்ணைத் தொடர்பு கொண்டால் என்ன பயன்?

1. இலவச அழைப்பு எண்ணை அழைக்கும் போது கடைசி 5 பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களைப் பெறலாம்.
2. ஏடிஎம் கார்டு சேவையை முடக்குதல் அல்லது எப்போது கிடைக்கும் என்ற விவரங்களைப் பெறலாம்.
3. செக் புக் எப்போது கிடைக்கும் என்ற விவரங்களைப் பெறலாம்.
4. டிடிஎஸ் விவரங்கள் மற்றும் டெபாசிட் வட்டி சான்றிதழ் போன்ற விவரங்களைப் பெறலாம்.
5. புதிய ஏடிஎம் கார்டு பெற கோரிக்கை வைக்கலாம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே உஷார்..

முன்னதாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் +91-8294710946 அல்லது +91-7362951973 என்ற எண்களிலிருந்து அழைப்பு வந்தால் அவற்றை ஏற்க வேண்டாம் என அசாம் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்து இருந்தது. மேலும் இவை மோசடி எண்கள் எனவும், வாடிக்கையாளர்கள் விவரங்களைக் கேட்டாலும் அவற்றைக் கொடுக்க வேண்டாம். எஸ்.எம்.எஸ் மூலம் இணைப்பு ஏதேனும் வந்தாலும் கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version