பர்சனல் ஃபினான்ஸ்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி அதற்கு அபராதம் கிடையாது!

Published

on

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வங்கி கிளைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ-ல் 44 கோடி சேமிப்பு கணக்குகள் உள்ளன. இந்த சேமிப்பு கணக்குகளில் 3000, 2000 மற்றும் 1000 ரூபாய் என வங்கி கிளையின் இருப்பிடத்தைப் பொருத்து மினிமம் பேலன்ஸ் வைத்து இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என இருந்தது.

ஒருவேலை மேலே குறிப்பிட்டுள்ள மினிமம் பேலன்ஸை நிர்வகிக்கவில்லை என்றால் 5 ரூபாய் + ஜிஎஸ்டி முதல் 15 ரூபாய் ஜிஎஸ்டி வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த அபராத தொகை கொரோனாவுக்கு முன்பு அதிகமாக இருந்ததும், அண்மையில் குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வங்கி கணக்கில் சேமிப்பு கணக்குகளுக்கு இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என்றும் எஸ்எம்எஸ் சேவை கட்டணமும் இல்லை எஸ்பிஐ அறிவித்து இருப்பது அதன் வாடிக்கையாளர்களுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் சேமிப்பு கணக்குகளில் வாடிக்கையாளர்களுக்கு வைத்துள்ள பணத்திற்கு ஆண்டுக்கு 2.7 சதவீதம் வட்டி விகித லாபம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதமானது ஆர்பிஐ ரெப்போ வட்டி விகித கூட்டல் குறைப்புக்கு ஏற்ப மாறும்.

இவை மட்டுமல்லாமல் எஸ்பிஐ வங்கிக் கணக்கில் 25,000 ரூபாய்க்கும் அதிகமாகச் சேமிப்பைத் தொடர்ந்து நிர்வகிப்பவர்களுக்குப் பலவேறு கட்டண சலுகைகளையும், வரம்பற்ற ஏடிஎம் பரிவர்த்தனை சலுகைகளையும் எஸ்பிஐ வழங்கியது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version