பர்சனல் ஃபினான்ஸ்

இனி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்க ஓ.டி.பி அவசியம்!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, ஜனவரி 1-ம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது ஓ.டி.பி எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் அவசியம் என்று தெரிவித்துள்ளது.

இரவு நேரங்களில் ஏடிஎம் கார்டுகள் பயன்படுத்தித் திருடுவது அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பிஐ வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டுப்பாடுகளின் படி ஜனவரி 1-ம் தேதி முதல் மாலை 8 முதல் காலை 8 மணி வரை ஏடிஎம்-ல் ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிகமாகப் பணம் எடுக்கும் போது ஓ.டி.பி எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் அவசியம் ஆகும்.

இந்த புதிய கட்டுப்பாட்டால் சேவையில் வேறு எந்த குறைகளும் இருக்காது. அதே நேரம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது இந்த புதிய கட்டுப்பாடுகள் பொறுந்தாது.

seithichurul

Trending

Exit mobile version