பர்சனல் ஃபினான்ஸ்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ லாக்கர் கட்டணத்தை 3000 ரூபாய் உயர்த்தியுள்ளது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் சிறிய லக்கர் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர அளவு வங்கி லாக்கர் சேவை கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 4000 ரூபாயாகவும், லார்ஜ் சைஸ் லாக்கர் சேவை கட்டணம் 2000 ரூபாயிலிருந்து 8000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புறநகர் மற்றும் கிராமப்புற லாக்கர் கட்டணங்கள் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 9000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், லாக்கர் சேவைக்கு ஒரு முறை பதிவு கட்டணமாக 500 முதல் 1000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கி லாக்கர் சேவைக்கான லாக்கர் வாடகை கட்டணத்தைச் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் 40 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டண உயர்வு மார்ச் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆர்பிஐ விதிகளின் படி, வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது லாக்கர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது திறக்க வேண்டும். இல்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி லாக்கர் சாவிகளை சரண்டர் செய்ய கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version