இந்தியா

அதானி குழுமத்திற்கு வங்கிகள் கொடுத்த கடன் எவ்வளவு? எஸ்பிஐ மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகளா?

Published

on

அதானி குழுமத்திற்கு வங்கிகள் கொடுத்த கடன் எவ்வளவு என்பது குறித்த தகவலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நிலையில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன.

ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி குழுமங்களில் உள்ள நிறுவனங்களில் பங்குகள் தலைகீழாக குறைந்து வரும் நிலையில் அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் பெரும் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதானி குழுமம் வாங்கிய மொத்த கடன் எவ்வளவு? எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடன் கொடுத்துள்ளன? என்பதை குறித்த விவரங்களை உடனடியாக அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

adani1

அந்த வகையில் தற்போது அதானி குழும நிறுவனங்களின் மொத்த கடன் 2 லட்சம் கோடி என்றும் அதில் எஸ்பிஐ வங்கி மட்டும் 21,375 கோடி கடன் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதேபோல் இண்டஸ் இண்ட் வங்கி 13,500 கோடி கடன் கொடுத்துள்ளதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி 7500 கோடி கடன் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதானி குழுமம் வாங்கி உள்ள 2 லட்சம் கோடி கடனில் இந்த மூன்று வங்கியில் தவிர மேலும் சில வங்கிகள் கடன் கொடுத்துள்ளதாகவும் அந்த வங்கிகள் மற்றும் அந்த வங்கிகள் கொடுத்த கடன் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இன்னும் சில மணி நேரத்தில் வந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

அதானி குழுமத்திற்கு 2 லட்சம் கோடி கடன் என்ற தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளிலும் அதானி குழுமம் வாங்கியது குறித்து தான் ஹிண்டர்பெர்க் தனது அறிக்கைகள் தெரிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதானி குழுமங்களில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து கொண்டே வருவதை அடுத்து மேற்கண்ட வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version