வணிகம்
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி, ஒரு சோகச் செய்தி!
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
இதனால் 3.50 சதவீதமாக இருந்த எஸ்பிஐ சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதம் 3.25 சதவீதமாக குறைந்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது எஸ்பிஐ சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு சோகச் செய்தியாக அமைந்துள்ளது.
மறுபக்கம், ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி MCLR வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்திலிருந்து 0.10 சதவீதம் குறைத்து 8.05 சதவீதமாக அறிவித்துள்ளது.
எனவே வீட்டுக் கடன், வாகன கடன் மீதான ஈஎம்ஐ வரும் மாதம் முதல் குறையும் என்பதால் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.