வணிகம்
வட்டி விகிதத்தை குறைத்த எஸ்பிஐ, வீடு, கார் கடன் ஈஎம்ஐ குறையுமா?
பாரத ஸ்டேட் வங்கி என அழைக்கப்படும் எஸ்பிஐ வங்கி, கடன் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தை 0.15% குறைத்து அறிவித்துள்ளது.
2019-2020 நிதியாண்டில் இதுவரை 10 முறை எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, கார் கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதம் குறையும்.
அதுமட்டுமல்லாமல் எஸ்பிஐ வங்கியின் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதம் 0.10 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது.
கடன் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகித குறைப்பு மட்டுமல்லாமல், சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு இருந்த மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையை முழுமையாக நீக்கியுள்ளது.