பங்கு சந்தை

எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு? எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா?

Published

on

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ, பிப்ரவரி 2-ம் தேதி பங்குச்சந்தையில் தங்களது பங்குகளை வெளியிட உள்ளது.

எஸ்பிஐ கார்ட்ஸ் முதற்கட்டமாக 9000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலமாக விற்க உள்ளது. ஐபிஓ-ல் எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகளை மார்ச் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை வாங்கலாம்.

பங்குகள் விலை குறைந்தபட்சம் 750 ரூபாய் எனவும், அதிகபட்சம் 755 ரூபாய் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஓ-ல் குறைந்தபட்சம் 19 பங்குகள் ஒரு லாட் என வாங்க முடியும்.

எஸ்பிஐ ஊழியர்களுக்கு 75 ரூபாய் சலுகை அளிக்கப்படும்.

எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ வங்கிக்கு 76 சதவீத பங்குகளும், கார்லைல் குழுமத்திடம் மீதப் பங்குகளும் உள்ளன.

சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36 சதவீதமாக உள்ளது. அதே காலகட்டத்தில் லாபம் 78 சதவீதம் அதிகரித்து 1,034.58 கோடி ரூபாயாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version