வணிகம்

எஸ்பிஐ வங்கியில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய ஏடிஎம் விதிமுறைகள்!

Published

on

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் தினசர் பணம் எடுக்கும் வரம்பினை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக இன்று (அக்டோபர் 31) முதல் குறைத்துள்ளனர்.

இதுவே அதிக ரொக்க பணம் தேவைப்படுகிறது என்றால் டெபிட் கார்டின் திட்டத்தினை மாற்ற வேண்டும். எனவே எஸ்பிஐ வங்கியின் புதிய விதிமுறைகள் பற்றிக் கீழே விளக்கமாகப் பார்க்கலாம்.

1. கிளாஸிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகளில் இருந்து பணம் எடுக்கும் வரம்பினை மட்டும் எஸ்பிஐ வங்கி 2018 அக்டோபர் 31-ம் தேதி முதல் குறைத்துள்ளது.

2. இதுவே எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் இருந்து அதிகப்படியான பணம் எடுக்க வேண்டு என்றால் உயர் மதிப்பு டெபிட் கார்டுகளைப் பெற வேண்டும்.

3. ரொக்க பணம் பரிவர்த்தனையினைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கும் ஒரு கட்ட நடவடிக்கை இது என்றும் எஸ்பிஐ வங்கியில் இருந்து செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

4. மேலும் ஏடிஎம் மையங்களில் மோசடி நடைபெறும் போது ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவே இந்த முடிவு என்றும் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version