இந்தியா

ராகுல் காந்திக்கு சாவர்க்கரின் பேரன் சவால்: மன்னிப்பு கேட்ட ஆதாரத்தை காட்டுங்கள்!

Published

on

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி என்றார். இதற்கு மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராகுல் காந்தி சாலையில் நடமாட முடியாது என பகிரங்க மிரட்டல் விடுத்தார். உத்தவ் தாக்ரேவும் தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்நிலையில் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் ராகுல் காந்திக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

#image_title

இதுகுறித்து பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சாவர்க்கர் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் தெய்வம். ராகுல் காந்தி அவரை அவதூறாகப் பேசியுள்ளார். மன்னிப்பு கேட்பதற்கு தான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று கூறியுள்ளார். சாவர்க்கரைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார்? இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் அவதூறாகப் பேசியுள்ளார். தொடர்ந்து அதே தொனியில் பேசி வருகிறார். அவர் தொடர்ந்து பேசினால், சாலையில் நடக்கவே சிரமமாக இருக்கும் என அவருக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார். இந்த நிலையில், சாவர்க்கர் குறித்து இழிவாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு பேசுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்றும் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், மன்னிப்பு கேட்க நான் சாவர்கர் அல்ல என்று ராகுல்காந்தி கூறியது குறித்து சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். தான் சாவர்கர் இல்லை என்பதால் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ராகுல்காந்தி கூறினார். சாவர்கர் மன்னிப்பு கேட்டதற்கான ஆதாரத்தை காட்டும்படி ராகுல்காந்திக்கு நான் சவால் விடுகிறேன். அதேவேளை, உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டுள்ளார் என்றார் அவர்.

seithichurul

Trending

Exit mobile version