இந்தியா

சவுதியில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க உறுதி அளித்த முகமது பின் சல்மான்!

Published

on

டெல்லி: சவுதி சிறைகளில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்கச் சவுதி அரேபிய உறுதியளித்துள்ளது.

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் முகமது பின் சல்மான் சவுதி சிறைகளில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க உறுதி அளித்துள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக பத்திரிக்கை தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு முதல் இந்தியாவிலிருந்து கூடுதலாக 25,000 நபர்களை ஹஜ் புனித யாத்திதிரை மேற்கொள்ளச் சவுதி அரேபிய இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இனி ஆண்டுக்கு 2 லட்சம் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செய்ய முடியும்.

இந்திய பொருளாதாரம் மீது சவுதி அரேபியா மிகவும் நம்பிக்கை வைத்துள்ளது. எனவே இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளோம் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னர், பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை ஒழிப்பது, அவர்களை ஆதரிப்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது போன்றவற்றுக்கு சவுதியுன் இணைந்து இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று ிரதமர் மோடி கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version