உலகம்

இந்தியா உள்பட 16 நாடுகளுக்குக் செல்லக்கூடாது: மக்களுக்கு தடை விதித்த சவுதி அரேபியா

Published

on

இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு சவுதி அரேபிய மக்கள் செல்லக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உலகம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா வைரஸில் புதுவகை வைரஸ் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

SARS-CoV-2 Coronavirus Variant Omicron cell delta on green background 2021 2022.

இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகள் இருந்ததால் கொரோனாவை கட்டுப்படுத்த போக்குவரத்து தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் இன்னும் தினமும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிப்பு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் சவுதி அரேபிய மக்கள் இந்தியா, பெலரஸ், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இதனால் சவுதி அரேபிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version