இந்தியா

இன்று இரவு பூமிக்கு மிக அருகில் ‘சனி’ கோள்- சாதாரணமாகவே காண முடியுமா?

Published

on

இன்று இரவு பூமிக்கு மிக அருகே சனி கோள் கடந்து செல்ல உள்ளது. இதை மக்கள் சாதாரண பைனாக்குலர்கள் கொண்டே காண முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வானியல் அறிவியலாளர்களின் கூற்றின்படி இன்று பூமிக்கு மிக அருகே வரும் சனி கோளை மக்களால் எளிதால் கண்டு கொள்ள முடியுமாம். சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களுள் ஒன்றாகத் திகழும் சனி கோள் இன்று காலை 11.30 மணி அளவில் பூமிக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துள்ளது.

பகலில் பார்க்க முடியாவிட்டாலும் இன்று இரவு வரையில் சனி கோளை பூமியில் இருந்து எளிதாகக் காணலாம். சாதாரண பைனாகுலர்கள் மூலம் சனி கோளை வளையத்துடன் காண முடியும். ஆனால், கோளரங்கங்களில் உள்ள தொலைநோக்கியின் மூலம் பார்த்தால் கோள்- வளையம் இடையே உள்ள இடைவெளியைக் கூட நுட்பமாகக் காண முடியும் எனக் கூறுகிறார் ஒடிசா பதானி சமந்தா கோளரங்கம் துணை இயக்குநர் சுவேந்து பட்நாயக்.

வெறும் கண்களில் வானத்தில் மற்ற நட்சத்திரங்களைப் பார்ப்பது போல பார்க்க முடியும். ஆனால், சனி கோளை தனியாக அடையாளம் கொள்ள ஒரு வித்தியாசம் உள்ளது. மற்ற நட்சத்திரங்களைப் போல் மின்னாமல் ஒளிரம் நட்சத்திரம் தான் சனி கோள். இன்று இரவு இந்த அரிய காட்சியை பூமியில் இருந்து காணலாம்.

Trending

Exit mobile version