இந்தியா

சனி, ஞாயிறு மீண்டும் பொதுமுடக்கம்: அரசு அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மீண்டும் சனி ஞாயிறு பொது ஊடகம் என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமின்றி ஜிகா வைரஸ் தாக்கம் உயர்ந்து வருகிறது. தினமும் 14 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அதேபோல் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தற்போது கேரளாவில் 23 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சனி ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் சனி ஞாயிறுகளில் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த வாரமும் அதே நிலை நீடிப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. எனவே வரும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அதாவது வரும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள மாநில மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version