தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா சாட்டை துரைமுருகன்?

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக யூடியூப் பிரபலமும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவருமான சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சியை விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை பொருளை எடுத்துக் கொண்டு செல்வதை கண்டித்து அக்டோபர் 10ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்து கொண்டு திமுக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யாக குற்றம் சாட்டி வழக்கு புனைந்து சிறைப்படுத்தி இருப்ப்து கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்கமுடியாது.

சாட்டை துரைமுருகன் தற்போதைய சூழ்நிலையில் கட்சியை விட்டு நீக்கி அவரை கைவிட்டது போல் கட்சியின் கடிதத்தை போலியாக உருவாக்கி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியல் ஆகும். தருணத்தில் அவர் வழக்குகளில் இருந்து மீண்டு வரவும் சிறையில் இருந்து வெளியே வரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாக துணை நிற்கும் என தெரியப்படுத்திக் கொள்கிறோம். இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version