தமிழ்நாடு

ஸ்டாலின், பினரயி விஜயன் இடையே கடும் போட்டி: நூல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ்

Published

on

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர்களுக்கு இடையே சரியான போட்டி தொடங்கியுள்ளது என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் இந்த விழாவில் நன்றியுரை கூற சத்யராஜ் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் ’தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கும் யார் சிறந்த முதல்வர் என்பதில் போட்டி இருப்பதாகவும் இதில் யார் சிறந்த முதல்வராக இருந்தாலும் எனக்கு பெருமையே என்றும் கூறினார்.

மேலும் தான் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்றும் எம்ஜிஆரின் ரசிகனாகவே முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தி அவர்கள் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் சிங்கம் போல் கர்ஜித்தார் என்றும் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் ராகுல் காந்தியை திராவிட முறைப்படி தம்பி என்ன அழைக்கிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மிசா கால நாட்களை திரைப்படமாக எடுக்கலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version