சினிமா செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சத்யராஜ் உடல்நிலை: சிபிராஜ் டுவிட்!

Published

on

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது மகன் நடிகர் சிபிராஜ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது தெரிந்ததே. கமல்ஹாசன், வடிவேலு, சத்யராஜ், த்ரிஷா, ஷெரின், ரெய்சா வில்சன், ஷோபனா உள்பட பலருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர் என்பதும் ஒரு சிலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சத்யராஜ் தற்போது முழுமையாக குணமாகி விட்டதாகவும் இதனை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி விட்டதாகவும் நடிகர் சிபிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் தனது தந்தை தனது வழக்கமான பணியை தொடர்வார் என்றும் அவர் அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் சத்யராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version