சினிமா செய்திகள்

’வலிமை’ தேதியை பிடித்த ‘நாய்சேகர்’: சென்சார், ரன்னிங் டைம் தகவல்!

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, இரவு 10 மணி மணிக்கு மேல் காட்சிகளுக்கு அனுமதி இல்லை, ஞாயிறு முழுவதும் திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் காரணமாகவே ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வலிமை’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து பல சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் சதீஷ் நடித்த ‘நாய்சேகர்’ என்ற திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் சென்சார் முடிந்து விட்டது என்றும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளதாகவும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 132 நிமிடங்கள் என்றும் அதாவது இரண்டு மணி நேரம் 12 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version