சினிமா செய்திகள்

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படம்: சதீஷ் நாயகன்

Published

on

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் விஜய் நடித்த ’பிகில்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் சதீஷ் கதாநாயகனாகவும் பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்க உள்ளார்கள். கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்குனராக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடதக்கது. பிரவீன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராகவும், அஜீஸ் அசோக் என்பவரை இசை அமைப்பாளராகவும் பணிபுரிய உள்ளனர்.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல திரைப்படங்களில் காமெடி நடிகராக சதீஷ் நடித்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இருப்பினும் இந்த படத்தில் ஒரு நாய் தான் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version