சினிமா

பேட்ட படத்தில் சசிகுமாரின் கேரக்டர் என்ன தெரியுமா?

Published

on

பேட்ட படத்தில் ரஜினியின் இஸ்லாமிய நண்பராக நடித்துள்ளார் சசிகுமார்.

ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பரான பாட்ஷா படத்தில் மாணிக்கமாக இருக்கும் ரஜினி, தனது இஸ்லாமிய நண்பரான பாட்ஷா கொலை செய்யப்பட்டதும், அதற்கு பலி வாங்கும் விதமாகவும், கொடுமைகளை செய்யும் ஆண்டனியை அழிக்கவும் மாணிக் பாட்ஷாவாகா உருவெடுப்பார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் பேட்ட படத்திலும் சசிகுமார் ரஜினிக்கு நண்பராக வருகிறார். அவரது கேரக்டருக்கு மாலிக் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜித்துவாக விஜய்சேதுபதியும் சாந்தாராமாக நவாசுதின் சித்திக்கும் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் கேரக்டர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version