சினிமா செய்திகள்

’நாய்சேகர்’ படத்தை அடுத்து ஜனவரி 13ல் ரிலீஸாகும் இன்னொரு திரைப்படம்!

Published

on

அஜித் நடித்த வலிமை திரைப்படம் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் ரிலீஸ் என சின்ன பட்ஜெட் படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’நாய்சேகர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது என்பதும் சென்சார் பணிகளும் முடிந்து விட்டது என்பதையும் ரிலீஸ் தேதி அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் வெளிவந்த செய்தியை பார்த்து வந்தது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சசிகுமாரின் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் என்றும் சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பதை அடுத்து இந்த படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ள இந்தப் படம் சசிகுமாரின் வெற்றி பட வரிசையில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version