தமிழ்நாடு

ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-ஸுக்கு வேட்டு வைக்க சசிகலா போட்ட புது வழக்கு; ட்விஸ்டு வைத்த ‘சின்னம்மா’

Published

on

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்து விட்டு, சென்ற மாதம் 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வந்தார் சசிகலா. அதைத் தொடர்ந்து இம்மாதம் தன் ஆதரவாளர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில், கடந்த 8 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். அப்போதில் இருந்து இப்போது வரை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் சசிகலா. இந்நிலையில், அதிமுகவிற்குத் தன்னைத் தான் பொதுச் செயலாளர் என அறிவிக்க வேண்டும் என்று கூறி புதிய வழக்கு ஒன்றை சசிகலா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டார்கள். இந்த அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிடக் கோரி அப்போதே ஒரு வழக்குப் போட்டிருந்தார் சசிகலா.

இந்நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சசிகலா, அவசர விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் வரும் மார்ச் 15 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ஒரு பக்கம் நீதிமன்றம் வாயிலாக அதிமுகவைத் தன் வசம் கொண்டு வர சசிகலா காய்களை நகர்த்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தைகள் மூலமும் அதிமுகவில் தன் ஆதரவு வட்டத்தை அவர் பெருக்கி வருவதாக தகவல்.

 

 

Trending

Exit mobile version