தமிழ்நாடு

பெங்களூருவிலிருந்து சசிகலா வந்த கார் விபத்தில் சிக்கியது – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!!!

Published

on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று 4 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார்.

ஆனால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தினால், பெங்களூருவில் உள்ள விக்டோரியா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். தொடர்ந்து பெங்களூருவிலேயே ஒரு வார காலம் ஓய்வெடுத்து வந்தார் சசிகலா. இந்நிலையில் பூரண உடல் நலம் பெற்று இன்று, தமிழகம் திரும்புகிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், சசிகலாவின் அரசியல் ரீ-என்ட்ரி அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு வழி வகுக்கும் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக அதிமுக – அமமுக இணைப்புக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில அமைச்சர்கள் மற்றும் சில மூத்த நிர்வாகிகள் மட்டுமே சசிகலா வருகையை எதிர்த்துக் கருத்துக் கூறி வருகின்றனர். ஆனால் பெரும்பான்மையான அதிமுக நிர்வாகிகள், எந்த வித கருத்தையும் உறுதியாக சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர். இதுவே, சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவுக்கு உள்ளேயே பலர் இருக்கின்றனர் என்பதைத் தான் காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்குச் செல்வதற்கு முன்னர், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று சபதம் போட்டுவிட்டுப் போனார் சசிகலா. அந்த சபதத்தை நிறைவேற்றும் பணியில் அவர் இறங்குவார் என்றே தெரிகிறது. அதே நேரத்தில் சசிகலாவுக்கு அரசியல் ரீதியாக எந்தவித ஆதாயமும் கிடைத்து விடக் கூடாது என்னும் நோக்கில் ஜெயலலிதாவின் நினைவிடம், அவர் வாழ்ந்த வேதா இல்லம், சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகம் என எல்லாவற்றையும் பூட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்புப் போட்டுள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் இன்று ஆதரவாளர்களுடன் சசிகலா, பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக தமிழகம் வந்து கொண்டிருந்தார். அப்போது ஓசூர் அருகே சசிகலாவின் கார், ஒரு சிறிய விபத்துக்கு உள்ளானது. அது குறித்தான வீடியோ இதோ:

இந்த விபத்தினால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத காரணத்தினால், சசிகலாவின் பயணம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருந்தது. அவர் எப்படியும் இன்று தன் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்போது தன் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக விளக்குவார் என்றும் தெரிகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version