தமிழ்நாடு

#SasikalaReturns – ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ… சசிகலாவுக்கு ‘ட்ரோன் வரவேற்பு’!!

Published

on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர், தமிழக எல்லைக்குள் ட்ரோன் மூலம் அவருக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். ட்ரோனில் சசிகலாவின் படங்களோடு கொண்ட விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்தான படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சசிகலா குறித்து இன்று காலையிலிருந்து வைரலாகி வரும் வீடியோக்கள்:

பெங்களூருவிலிருந்து புறப்படும் முன்னர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டுப் புறப்பட்டார் சசிகலா.

பெங்களூருவிலிருந்து சசிகலாவின் வாகனம் புறப்பட்ட போது, அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் ஆரவார கோஷம் எழுப்பினார்கள்.

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கான சசிகலா ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முழுவதையும் சசிகலா ஆதரவாளர்கள் ஆக்கிரமித்தனர். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

கர்நாடகா – தமிழ்நாடு எல்லையில் டிரம்ஸ் வாசித்து, கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்று சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Trending

Exit mobile version