தமிழ்நாடு

தோளில் அதிமுக துண்டு, ஓசூர் கோவிலில் சாமி கும்பிட்ட சசிகலா!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான நிலையில் இன்று அவர் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இன்று காலை 7 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி கடந்த சில நிமிடங்களுக்கு முன்னால் அவர் தமிழக எல்லையை தாண்டினார். அப்போது அவருடைய காரில் இருந்த அதிமுக கொடியை போலீசார் அகற்றினார்கள்.

இருப்பினும் அதிமுக உறுப்பினர் ஒருவரின் காரில் ஏறி சசிகலா சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதும் அந்த காரில் அதிமுக கொடி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சசிகலாவின் கார் திடீரென பழுதுபட்டதால் அவர் வேறொரு காரில் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த காரிலும் அதிமுக கொடி கட்டப்பட்டு உள்ளது.

சசிகலா வரும் காருக்கு சொந்தமானவர் அதிமுக உறுப்பினர் என்ற முறையில் அந்த கொடியை போலீசார் ஆகவில்லை. எனவே சசிகலா வந்துகொண்டிருக்கும் காரில் அதிமுக கொடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓசூர் அருகே வந்தபோது அவர் அங்கிருந்த முத்துமாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் தோளில் அதிமுக துண்டை போர்த்தி இருந்தார்.

காரிலிருந்து கொடியை அகற்றலாம் ஆனால் என் தோளில் இருக்கும் துண்டை எப்படி அகற்றல் முடியும் என்ற பாணியில் சசிகலா சாமி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவை சொந்தம் கொண்டாடும் வகையில் காரில் கொடி, தோளில் துண்டு ஆகியவை அணிந்திருப்பதால் அதிமுக தலைவர்கள் இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version