தமிழ்நாடு

சிறையிலிருந்து இல்லை… மருத்துவமனையிலிருந்தே நேரடியாக வீடு திரும்பும் சசிகலா..!

Published

on

சசிகலா சிறையில் இருந்து இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போதே விடுதலை ஆகி அங்கிருந்தே நேரடியாக சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்து வந்தார். நேற்று சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சசிகலாவின் உடல் நிலை சீராகவே இருப்பதாக அமமுக-வ்ன் தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த சூழலில் சசிகலாவின் விடுதலை நாளும் நெருங்கி வருகிறது. ஜனவரி 27-ம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகி சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால், தற்போது சசிகலா மருத்துவமனையில் இருக்கிறார். இதனால் டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் சிறை சென்று அங்கிருந்து வரும்படி நடைமுறை இருக்குமோ என்ற கேள்வி எழுந்திருந்தது.

ஆனால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை கொடுத்துள்ள சசிகலாவின் டிஸ்சார்ஜ் தேதியும் சசிகலா விடுதலை நாளும் ஏறத்தாழ ஒன்றுதான் என்கிறார் அமமுக நிர்வாகி ஒருவர். இதனால் நேரடியாக மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக ஓசூர், கிருஷ்னகிரி, ஆம்பூர், வேலூர் வழியாக சென்னை வீட்டுக்கு வந்தடைவார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

சசிகலா சென்னை திரும்பும் போது பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அமமுக தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளார்களாம்.

seithichurul

Trending

Exit mobile version