தமிழ்நாடு

முதல்வர் வீடு அருகே சசிகலா ஆதரவு போஸ்டர்கள்: பெரும் பரபரப்பு!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான நிலையில், அவர் நாளை மறுநாள் சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சசிகலாவை வரவேற்க சென்னையின் பல இடங்களில் அமமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் அதிமுகவில் உள்ள ஒருசில நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்பதாகவும் சசிகலாவை வரவேற்பதற்காக போரூர் உள்பட 12 இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும் தமிழகம் முழுவதும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன என்பதும், அவர்களில் ஒரு சிலர் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து உள்ளது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

’உங்களுடைய சொல் தான் இங்கு சாசனம்’ ’எங்கள் ராஜமாதாவே’ போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் முதல்வர் வீடு அருகே ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்து ஒட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதாக வருவதால் எத்தனை பேரைத்தான் கட்சியில் இருந்து நீக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version