தமிழ்நாடு

திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் வேண்டுகோள்!

Published

on

தமிழ்ப்‌ புத்தாண்டை தை மாதத்‌திற்கு மாற்றம்‌ செய்யும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்‌!

கடந்த சில நாட்களாகவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திமுக அரசுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்து அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழ் புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றப் போவதாக வரும் செய்திகள் உண்மை தானா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாக தெரியவில்லை. பின் எதற்காக இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.
அதேபோல் கடந்த வாரத்தில் மதுரை ஜெய்ஹிந்த்திபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் படம் வைத்ததாக செய்திகள் வெளிவந்தன. பின்னர் மாலை அது மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.
இதுபோன்ற செயல்கள் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு தெரிந்து தான் நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் ஏதாவது ஒரு அதிகார மையத்தின் தலையீட்டால் நடக்கிறதா? அல்லது அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் சாமானிய மக்களுக்கு தொடர்ந்து வருவதாக சொல்கிறார்கள்.

புரட்சித்தலைவர் தலைவி அம்மா அவர்கள் தமிழ் புத்தாண்டு எதற்காக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதற்கான சரியான விளக்கத்தை பல்வேறு ஆதாரங்களுடன் நன்றியை தெரிவித்து இருக்கின்றார். அதை சரியாக புரிந்து கொண்டாலே போதும், மக்களை குழப்புபவர்களும் தெளிவு அடைவார்கள்.

எனவே இதுபோன்று மக்களுக்கு உதவாத செயல்களில் அரசு தங்கள் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த வழிவகை செய்ய செய்தாலே போதும். அதுவே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆகையால் தமிழக அரசு தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்கின்ற முயற்சியை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தை செலவழித்து மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version