Connect with us

தமிழ்நாடு

இனியும் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது: சசிகலாவின் ஆவேச அறிக்கை!

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு வாங்க வந்த மூன்று தொண்டர்கள் அடித்து விரட்டப்பட்ட தகவல்கள் வெளிவந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கழகத்‌தினர்‌ ஒற்றுமையுடன்‌ இருந்தால்தான்‌, எதிரிகளை வெல்லமுடியும்‌.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும்‌, ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும்‌ நம்‌ இரும்பெரும்‌ தலைவர்களின்‌ தலைமையில்‌ செயல்பட்டு வந்திருக்கிறது. நாட்டில்‌ உள்ள அனைத்து அரசியல்‌ கட்சியினரும்‌ பார்த்து பொறாமை படும்‌ அளவுக்கு ஒளிர்ந்த நம்‌ இயக்கத்தின்‌ இன்றைய நிகழ்வுகளைப்‌. பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும்‌ வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. என்றைக்கு நம்‌ புரட்‌சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்றுமுதல்‌ இன்று வரை நம்‌ இயக்கத்தில்‌ “நடைபெறும்‌ செயல்களை பார்க்கும்போது என்‌ மனது மிகவும்‌ வேதனைப்படுகிறது.

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும்‌ தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில்‌ அக்கறை காட்டும்‌ போது தான்‌, அதை பார்க்கும்‌ மற்றவர்களுக்கும்‌ அந்த இயக்கத்தின்‌ மீது ஒரு நல்ல எண்ணமும்‌, நம்பிக்கையும்‌ வரும்‌. எந்த ஒரு இயக்கத்திற்கும்‌ கொடி பிடிக்கும்‌ தொண்டர்கள்‌ தான்‌ தேவையே ஒழிய தடி எடுக்கும்‌ குண்டர்கள்‌ அல்ல.

திரு.ஓமபொடி பிரசாத்‌ சிங்‌ அவர்கள்‌ புரட்‌சித்தலைவரின்‌ அன்பைப்‌ பெற்றவர்‌. அதுமட்டுமல்ல திரு.பிரசாத்‌ சிங்‌ அவர்கள்‌ தலைவர்‌ கையால்‌ தாலி எடுத்து கொடுத்தால்தான்‌ தனக்கு திருமணம்‌ என்று திருமண மேடையில்‌ வெகுநேரம்‌ காத்‌திருந்து, பின்னர்‌ தலைவரும்‌ இந்த எளிய தொண்டனின்‌ அன்பால்‌ கட்டுப்பட்டு திருமண மேடைக்கு வந்து தாலி எடுத்து கொடுத்தபின்னர்‌ திருமணம்‌ செய்து கொண்டவர்‌. மேலும்‌, புரட்சித்தலைவர்‌ அவர்கள்‌ கட்சி‌ தொடங்கிய சிறிது காலத்தில்‌ மீண்டும்‌ திமுகவோடு இணைவதற்காக பேச்சுவார்த்தையில்‌ இருந்த வேளையில்‌ திரு. பிரசாத்‌சிங்‌ திரு,முசிறிப்புத்தன்‌ ஆகியோரை திமுகவினர்‌ தாக்கியதை பார்த்தவுடன்‌, திமுகவுடன்‌ மீண்டும்‌ சேர்வது என்ற முடிவை கைவிட்டு விட்டு, அனைத்‌திந்‌திய அண்ணா இராவிட முன்னேற்றக்‌ கழகத்தை தொடர்ந்து வழி நடத்தி வெற்றிகண்டார்‌.

அதே போன்று, எளிய தொண்டரான திரு..ராஜேஷ்‌ அவர்களும்‌ இன்றைக்கு தலைமைக்‌ கழகத்திலேயே தாக்கப்பட்டது மிகவும்‌ வேதனையளிக்கிறது. இன்று, நம்‌ தொண்டர்களின்‌ நிலையை இருபெரும்‌ ‘தலைவர்களும்‌ கண்ணீரோடுதான்‌ பார்த்துக்கொண்டு இருப்பார்கள்‌. அவர்கள்‌ கட்டி காத்த இந்த இயக்கத்தை சீரழித்துவிடாதீர்கள்‌. இனியும்‌ இதை எல்லாம்‌ பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால்‌ சும்மா இருக்க முடியாது. தொண்டர்கள்‌ மீது விழும்‌ ஒவ்வொரு அடியும்‌ ஓட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின்‌ மீது விழுந்த அடியாகவும்‌, என்‌ மீது விழுந்த அடியாகவும்தான்‌ நான்‌ நினைக்கிறன்‌. ஒரு தலைமையால்தான்‌ அந்த வலியை உணரமுடியும்‌. ஆணிவேரான தொண்டர்கள்‌ இருந்தால்தான்‌ இந்த இயக்கம்‌ ஆலமரமாக தழைத்தோங்கும்‌. இதை ஒவ்வொருவரும்‌ மனதில்‌ வைத்து, நம்‌ தலைவர்கள்‌ காட்டிய வழியில்‌, ஒற்றுமையுடன்‌ இருந்தால்‌ தான்‌ வரும்‌ நாட்களில்‌, நம்‌ எதிரிகளை வெல்ல முடியும்‌ என்பதின்‌ அவசியத்தை உணர்ந்தாகவேண்டும்‌ என்று கேட்டு கொள்கிறேன்‌.

இவ்வாறு சசிகலா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

ஜோதிடம்54 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!