Connect with us

தமிழ்நாடு

#SasikalaReturns – ஜெ., படத்துக்கு மரியாதை முதல் ஆதரவாளர்கள் கொடுத்த ஆரவார வரவேற்பு வரை – இப்படித்தான் இருந்தது சசிகலா வருகை! #Videos

Published

on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து புறப்படும் முன்னர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டுப் புறப்பட்டார் சசிகலா.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று 4 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார்.

ஆனால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தினால், பெங்களூருவில் உள்ள விக்டோரியா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். தொடர்ந்து பெங்களூருவிலேயே ஒரு வார காலம் ஓய்வெடுத்து வந்தார் சசிகலா. இந்நிலையில் பூரண உடல் நலம் பெற்று இன்று, தமிழகம் திரும்புகிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், சசிகலாவின் அரசியல் ரீ-என்ட்ரி அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு வழி வகுக்கும் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக அதிமுக – அமமுக இணைப்புக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில அமைச்சர்கள் மற்றும் சில மூத்த நிர்வாகிகள் மட்டுமே சசிகலா வருகையை எதிர்த்துக் கருத்துக் கூறி வருகின்றனர். ஆனால் பெரும்பான்மையான அதிமுக நிர்வாகிகள், எந்த வித கருத்தையும் உறுதியாக சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர். இதுவே, சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவுக்கு உள்ளேயே பலர் இருக்கின்றனர் என்பதைத் தான் காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்குச் செல்வதற்கு முன்னர், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று சபதம் போட்டுவிட்டுப் போனார் சசிகலா. அந்த சபதத்தை நிறைவேற்றும் பணியில் அவர் இறங்குவார் என்றே தெரிகிறது. அதே நேரத்தில் சசிகலாவுக்கு அரசியல் ரீதியாக எந்தவித ஆதாயமும் கிடைத்து விடக் கூடாது என்னும் நோக்கில் ஜெயலலிதாவின் நினைவிடம், அவர் வாழ்ந்த வேதா இல்லம், சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகம் என எல்லாவற்றையும் பூட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்புப் போட்டுள்ளது தமிழக அரசு.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)