தமிழ்நாடு

தடையை மீறி அதிமுக கொடியுடன் வரும் சசிகலா: நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published

on

அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஆணையர் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தும், சற்றுமுன் பெங்களூரில் இருந்து கிளம்பிய சசிகலா அதிமுக கொடியுடன் கூடிய காரில் வந்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் இருந்து சற்று முன்னர் கிளம்பிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வருகிறார். அவர் இன்னும் சிறிது நேரத்தில் தமிழக எல்லைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது, சசிகலா காரின் பின்னால் 5 கார்கள் மட்டுமே வர வேண்டும் என்பது உள்பட ஒரு சில நிபந்தனைகளை கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஆணையர் விதித்துள்ள நிலையில் தற்போது அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் வந்து கொண்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அதிமுக கொடியுடன் காரில் வரும் சசிகலா தடுத்து நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக எல்லையில் 1500 போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் தடுக்க கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் இன்று சசிகலா சென்னை வருவதை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் முழுக்கமுழுக்க போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version