தமிழ்நாடு

சசிகலா பொதுச்செயலாளர், ஈபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளர்: அதிமுக திட்டம் இதுதானா?

Published

on

சசிகலா அதிமுகவில் இணைந்தால் அவர்தான் பொதுச்செயலாளர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் என்றும், அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் ஓபிஎஸ் தான் முதல்வர் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த சில வருடங்களாக அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்து வரும் நிலையில் அதிமுகவின் தலைமையை மாற்ற வேண்டுமென அதிமுகவின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஓபிஎஸ் சகோதரர் சசிகலாவை நேரில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என்றும் அதிமுக ஆட்சியை கைப்பற்றினால் ஓபிஎஸ் தான் முதல்வர் என்றும் டிடிவி தினகரன் முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்றும் ஒப்பந்தம் பேசப்பட்டு இருப்பதாகவும் இதற்கு கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதால் உறுதி செய்யப்பட்ட தகவல் விரைவில் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

seithichurul

Trending

Exit mobile version