செய்திகள்
திடீரென ரஜினியை சந்தித்த சசிகலா – வைரல் புகைப்படங்கள்…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற அவர் விடுதலைக்கு பின் மறைமுற அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ரஜினியின் மனைவி லதாவும் உடனிருந்தார்.
ரஜினி சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பின் முற்றிலும் குணமடைந்தார். எனவே, அவரின் உடல் நிலை குறித்து சசிகலா கேட்டு அறிந்ததாகவும், தாதா சாகேப் பால்கே விருதை அவர் பெற்றதற்காக சசிகலா வாழ்த்து கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.