தமிழ்நாடு

ஓபிஎஸ்-ஐ சந்தித்தார் சசிகலா: 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த சந்திப்பால் பரபரப்பு!

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை அடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல பிரமுகர்கள் ஓபிஎஸ் மனைவிக்கு தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர் என்பதும், ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல் நபராக மறைந்த விஜயலட்சுமி அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறினார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து ஓபிஎஸ் அவர்களின் மனைவிக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக தலைவர்களிடமிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் சசிகலா, ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் ஓபிஎஸ் அவர்களை சசிகலா சந்தித்த நிலையில் தற்போது தான் மீண்டும் இருவரும் சந்தித்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமி அவர்களின் மறைவுக்கு சசிகலா அவர்கள் நேரில் சென்று ஓபிஎஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version