தமிழ்நாடு

அமமுக, தேமுதிக, மநீக கூட்டணி: சசிகலாவின் மாஸ்டர் பிளான்!

Published

on

தமிழகத்தில் தேர்தல் களைகட்ட தொடங்கி விட்ட நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஏற்கனவே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கும் நிலையில் சசிகலா அதிரடியாக ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருக்கும் அதிருப்தி கட்சிகள் மற்றும் சரத்குமார் கட்சி, சீமான் கட்சி, கமல் கட்சி ஆகியவற்றை ஒன்றிணைத்து மூன்றாவது அணியை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி உள்ளன. இந்த கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்தால் கண்டிப்பாக 15 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

அதுமட்டுமின்றி திமுக கூட்டணியில் ஏற்படும் அதிருப்தியால் வெளியேறும் கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையலாம். இவ்வாறு நடந்தால் கண்டிப்பாக 20 சதவீத வாக்குகளை இந்த கூட்டணி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு நிலைமை வந்தால் தமிழகத்தில் எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் அப்படி ஒரு நிலை வந்தால் பாஜகவுக்கு அது மிகப்பெரிய லாபமாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் தமிழகத்தில் சசிகலாவின் மாஸ்டர் பிளானால் முதல் முறையாக அதிமுக, திமுக இல்லாத ஒரு ஆட்சி அமையவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version