தமிழ்நாடு

விடுதலையாகும் சசிகலா! சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை!!

Published

on

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் விடுதலையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பா கர்நாடக உளவுத்துறை சிறைநிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும், நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை செலுத்தினால் 2021 ஜனவரியில் விடுதலையாகலாம், இல்லையென்றால் தண்டனை தொடரும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. சசிகலா தரப்பில் அந்த அபராதத் தொகையான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை செலுத்திவிட்டது. இதனால் சசிகலாவின் விடுதலை உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில், ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று தெரியவந்துள்ளது. தற்போது சசிகலாவின் விடுதலையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைககள் குறித்து கர்நாடக உளவுத்துறையானது, பரப்பன சிறை நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில் சசிகலா எப்பேது விடுதலை செய்யப்பட வேண்டும், எந்த எல்லை வரையில் பாதுகாப்பு விரிவுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வழக்கமாக மற்ற கைதிகளை இரவு 7.00 மணிக்கு விடுதலை செய்வார்கள். ஆனால், சசிகலாவை இரவு 9,30 மணிக்கு விடுதலை செய்யும்படி அறிவுறுத்தல் வழஙக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version