தமிழ்நாடு

சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு! நோய் பாதிப்பு குறைந்தது!!

Published

on

சசிகலாவுக்கு ஏற்பட்ட தொற்று நோய் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு சிறையிலிருந்து வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார். ஆனால், விடுதலையாகும் நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர், விக்டோரியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சசிகலாவிற்கு, கொரோனா தொற்று, நுரையீரல் தொற்று, நிமோனியா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சசிகலாவுக்கு நுறையீரல் தொற்று படிப்படையாக குறைந்து வருவதாகவும், விரைவில் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகும் தெரிவித்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி சசிகலாவின் உடல் நலம் தற்போது முன்னேறி வருவதாகவும், அவராகவே எழுந்து உட்கார்கிறார், எழுந்து நடக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு 295 ஆக அதகிரத்ததால், இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது

author avatar
seithichurul

Trending

Exit mobile version