தமிழ்நாடு

‘சின்னம்மா தாங்க எங்க பொதுச் செயலாளரு..!’- ராஜேந்திர பாலாஜி ‘பகீர்’; எடப்பாடி டீமில் முதல் விக்கெட் காலி

Published

on

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்துவிட்டு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, சசிகலா விடுதலையானார். இதையடுத்து சசிகலா, நேற்று முன் தினம் அவரது ஆதரவாளர்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே தமிழகம் வந்தடைந்தார். அப்படி வந்தவர், ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று பன்ச் கொடுத்துள்ளார்.

இதனால் சசிகலா, மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றுவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரும், தமிழக பால் வளத் துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, ‘சின்னம்மா தாங்க அதிமுகவின் பொதுச் செயலாளர். டிடிவி தினகரன் தான் துணைப் பொதுச் செயலாளர். அப்போதும் இப்போதும் அவர்கள் தாங்க பதவியில் இருக்காங்க’ என்று பகீர் கிளப்பும் கருத்தைக் கூறியுள்ளார்.

சசிகலா, விடுதலை ஆவதற்கு முன்பு வரை, எடப்பாடி பழனிசாமி முகாமில் இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் தற்போது திடீரென்று பல்டியடித்திருப்பது கட்சிக்கு உள்ளே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் சசிகலா. அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதே நேரத்தில், அந்த வழக்கில் சசிகலாவுக்கு எதிராக இதுவரை தீர்ப்பு வரவில்லை. இதனால், அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக மீண்டும் வளம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகின்றது. இதையொட்டி, ராஜேந்திர பாலாஜியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவர் மட்டுமல்ல அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவை தொடர்பு கொண்டு, அவருக்கு ஆதரவு கொடுத்து உள்ளதாகவும் தகவல்.

முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, ‘கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்.

அவசரமாக அம்மா நினைவிடம் மூடப்பட்டது எதை காட்டுகிறது என்பது மக்களுக்கு புரியும். தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன்’ என்று பேசினார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவர் சந்தித்த போது, ‘அதிமுகவை நீங்கள் கைப்பற்றுவீர்களா?’ எனக் கேட்கப்பட்ட போது, ‘கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன். அப்போது விரிவாக பேசலாம்’ என்று பதில்

seithichurul

Trending

Exit mobile version