தமிழ்நாடு

சசிகலாவின் சேவை தமிழக அரசியலுக்குத் தேவை – புது ரூட்டில் பிரேமலதா விஜயகாந்த்

Published

on

சசிகலா தமிழக அரசியல் ஈடுபட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பிரேமலா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தற்போது, அதிமுகவுடனான கூட்டணியில் இருக்கிறது. அதே நேரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்தக் கூட்டணி தொடருமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, பாமக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள், அதிமுக அரசுக்கு எதிராகவே தொடர்ந்து கருத்துகள் சொல்லி வருகின்றன. இதனால் வரும் நாட்களில் கூட்டணி காய் நகர்த்தல்கள், கூட்டணித் தாவல்கள் இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இப்படியான சூழலில் சசிகலா, வரும் 27 ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வருகிறார். அவர் தற்போது கொரோனா தொற்றலிருந்து குணமடைய பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் குணமடைந்து வெளியே வந்தவுடன் அதிமுகவில் பெரும் தாக்கம் இருக்கும் எனப்படுகிறது.

இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த், ‘சசிகலாவின் பங்கும் தமிழக அரசியலில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண்ணாக அவர் பூரண நலம் பெற்று தமிழக அரசியலில் தாக்கம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று சூசகமாக கூறியுள்ளார். பிரேமலதா இப்படி கூறியுள்ளதால் அதிமுகவுடனான கூட்டணி தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version