செய்திகள்

சசிகலா உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவர்கள் விளக்கம்

Published

on

சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று இருப்பதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இந் நிலையில் புதன்கிழமை மாலை மூச்சுதிணறல் அதிகமானதால், பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ‘ஆன்டிபயோடிக்’ மருந்துகளும் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதனால் காய்ச்சல் குறைந்தது.

மேலும் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் நுரையீரலில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  எனவே அவர் விக்டோரியா மருத்துவமனையிலேயே கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கண்ணா கூறியதாவது:

நிமோனியா காய்ச்சலால் அவருக்கு  மூச்சு திணறல் ஏற்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டதால் தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியானதால் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Trending

Exit mobile version