தமிழ்நாடு

சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி? ஓபிஎஸ்-ஈபிஎஸ் உடன் பிரதமருடன் ஆலோசனை!

Published

on

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவுக்கு கொடுப்பதற்காக தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களை டெல்லிக்கு பிரதமர் மோடி வரவழைத்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்க பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய சசிகலாவால் மட்டுமே முடியும் என்று பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ், தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது திமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களை கையில் எடுத்துள்ள நிலையில் சசிகலா பொதுச்செயலாளராக சசிகலா ஆனால் மட்டுமே திமுகவை சமாளிக்க முடியும் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சசிகலாவும் தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் மீதான வெறுப்புகளை கைவிட்டு இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதனை அடுத்து அதிமுக மிகவும் வலுவாகும் என்றும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதும், இதற்காகத்தான் ஓபிஎஸ் ஈபிஎஸ் டெல்லி சென்றார்களா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருவருமே தற்போது சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டதாகவும் புறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version